×

3 நாட்களுக்கு பிறகு திறப்பு தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்: இன்றும் விடுமுறை என்பதால் ‘சரக்கு’ வாங்கி குவித்தனர்

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி கடந்த 17ம் தேதி முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மதுபிரியர்கள் கடந்த 16ம் தேதி கடை திறந்த பிற்பகல் 12 மணி முதல் மதுபாட்டில்களை வாங்கி குவித்தனர். குறிப்பாக சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டத்தை காண முடிந்தது. அன்றைய தினம் மாலை 4 மணிக்கு மேல் மேல் எல்லா கடைகளிலும் திருவிழா போல கூட்டம் நிரம்பி வழிந்தது.

நெரிசலையும் பொருட்படுத்தாமல் முண்டியடித்து மதுபானங்களை வாங்கி சென்றனர். இதனால், கடந்த 16ம் தேதி ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மதுபானங்கள் விற்று தீர்ந்தது. தொடர்ந்து 17, 18, 19 என 3 நாள் விடுமுறையால் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. தேர்தல் முடிந்து நேற்று பிற்பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. முன்னதாக காலை 10 மணிக்கே டாஸ்மாக் கடைகள் முன்பாக மதுபிரியர்கள் தவம் கிடந்தனர். ஒவ்வொரு கடைக்கு முன்பும் 25 பேர் முதல் 50 பேர் வரை காத்திருந்தனர். சரியாக காலை 12 மணிக்கு கடை திறக்கப்பட்டதும் மதுபிரியர்கள் முண்டியடித்து சரக்குகளை வாங்கி சென்றனர்.

இன்று மகாவீர் ஜெயந்தி என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. இதனால், நேற்று பிற்பகல் முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று ஞாயிறுக்கிழமை என்பதால் விடுமுறையை உற்சாகமாக கொண்டாட நேற்று டாஸ்மாக் கடைகள் அனைத்திலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தங்களுக்கு பிடித்தமான சரக்குகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர். கடை மூடும் நேரமான இரவு 10 மணியளவில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், நேற்று வழக்கத்தை விட விற்பனையும் அதிகரித்தது.

The post 3 நாட்களுக்கு பிறகு திறப்பு தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்: இன்றும் விடுமுறை என்பதால் ‘சரக்கு’ வாங்கி குவித்தனர் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Tamil Nadu ,Chennai ,
× RELATED காலி மது பாட்டில்களை திரும்ப பெறும்...