- டி.அ.
- நரேந்திர மோடி
- மகாராஷ்டிரா
- மும்பை
- என். D. A.
- ஸ்ரீ நரேந்திர மோடி
- பிற்பகல்
- மோடி
- நான்டட் தேர்தல்
- தின மலர்
மும்பை: முதல்கட்ட வாக்குப்பதிவில் கிடைத்த தகவல் என்.டி.ஏ. அணிக்கு சாதகமாக உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நான்டெத் தேர்தல் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது பேசிய அவர், நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது. வாக்களித்த அனைவருக்கும் குறிப்பாக முதல்முறை வாக்களித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து, வாக்குச்சாவடி அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும், கிடைத்த தகவலும், முதல்கட்டமாக என்டிஏவுக்கு ஒருதலைபட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளதை உறுதி செய்கிறது.
வயநாட்டில் காங்கிரஸ் இளவரசர்களும் சிக்கலில் உள்ளனர். ஏப்ரல் 26ம் தேதி வயநாட்டில் வாக்குப்பதிவுக்காகக் காத்திருக்கிறார்கள் ஷெஜாடேவும் அவரது குழுவினரும். அமேதி தொகுதியில் இருந்து வெளியேறிய ராகுல் காந்தி வயநாட்டில் இருந்தும் வெளியேற்றப்படுவார். மற்ற கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் அனைவருக்கும், நீங்கள் தேர்தலில் தோற்கப் போகிறீர்கள் என்று உணர்ந்தாலும், ஏன் கடினமாக உழைக்க வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன் என பிரதமர் குறிப்பிட்டார். காங்கிரஸ் செய்த ஓட்டைகளை நிரப்பவே எங்களின் நிறைய நேரம் செலவிடப்பட்டது. மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் தடையாக இருந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் 25% இடங்களில் இந்தியா கூட்டணியினரே ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிட்டுள்ளனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில், நான்டெத் மற்றும் மகாராஷ்டிராவை நாம் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். 2024 தேர்தல் வெறும் ஆட்சி அமைப்பதற்காக அல்ல. ஆனால் இந்த தேர்தலின் நோக்கம் இந்தியாவை ‘விக்சித்’ மற்றும் ‘ஆத்மநிர்பர்’ ஆக்குவதுதான். எனவே, 2024 தேர்தல் விவகாரங்கள் வெறும் பொதுவான பிரச்னைகள் அல்ல. ஒவ்வொரு பிரச்சினையும் முக்கியம், எடுக்கும் ஒவ்வொரு அடியும் முக்கியம், ஒவ்வொரு ‘சங்கல்பமும்’ முக்கியம் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
The post முதல்கட்ட வாக்குப்பதிவில் கிடைத்த தகவல் என்.டி.ஏ. அணிக்கு சாதகமாக உள்ளன: மகாராஷ்டிராவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு appeared first on Dinakaran.