- மதுரை சித்திரை திருவிழா
- வைகை அணை
- மதுரை
- கல்லாகர் ஆறு
- மதுரை சித்திரை திருவிழா
- சித்ரா விழா
- கல்லஹகர் வயகை நதி
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தேவையான தண்ணீரை வைகை அணையில் இருந்து முன்கூட்டியே திறந்துவிட்டால் தான் குறிப்பிட்ட நாளில் தண்ணீர் மதுரையை சென்று சேரும். எனவே வைகை அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
அணையில் உள்ள நீர்மின் நிலையம் வழியாக ஆற்றில் திறக்கப்பட்டிருக்கும் தண்ணீர் விரைவில் மதுரையை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவுக்காக வரும் 23ம் தேதி வரை மொத்தம் 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தற்போதைய நிலவரப்படி, 59.17 அடியாகவும், நீர் இருப்பு 3,454 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது.
The post மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு..!! appeared first on Dinakaran.