×

ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு

ஆவடி, ஏப். 20: 10 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடிகளில் காவல் ஆணையர் சங்கர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். நாடாளுமன்ற 2024ம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட 10 ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, மாதவரம், வடசென்னை, ஆலந்தூர், பெரும்புதூர், மதுரவாயல், திருவொற்றியூர், பொன்னேரி ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட 2,054 வாக்குச்சாவடிகளில், எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க 3,292 காவலர்கள் வாக்குச்சாவடிகளில் பணியாற்றினர். இந்நிலையில், நேற்று ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட வாக்கு சாவடிகளுக்கு நேரில் சென்று சரியான முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

The post ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Avadi Police Commissionerate ,Avadi ,Shankar ,2024 ,elections ,10 ,Aavadi ,Ampathur ,Poontamalli ,Madhavaram ,Vadachennai ,Aavadi Police Commissionerate ,
× RELATED பல கோடி ரூபாய் கல்விக்கட்டணம் கையாடல்...