×

திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் வசந்த உற்சவம்

களக்காடு, ஏப்.20: களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான அழகிய நம்பிராயர் கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் பங்குனி மாதக் கடைசியில் வசந்த உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு வசந்த உற்சவம் கடந்த (14ம்தேதி) துவங்கியது. நேற்று 6வது நாள் உற்சவம் நடந்தது. இதையொட்டி காலையில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் தீபாராதனை நடந்தது. மாலையில் ராமானுஜ ஜீயர் முன்னிலையில் பெருமாள் கிளிக்கொரடு மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். சிறிய திருமடல் சேவையும் சிறப்பு தீபாராதனைகளும் இடம்பெற்றது. ராமானுஜர் உள்வீதியில் பெருமாள் புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 23ம்தேதி சித்ரா பவுர்ணமி வரை உற்சவம் தொடர்ந்து நடக்கிறது. ஏற்பாடுகளை ஜீயர் மடம் பவர் ஏஜன்ட் பரமசிவன் தலைமையில் ஜீயர் மடம் ஊழியர்கள் செய்துள்ளனர்.

The post திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் வசந்த உற்சவம் appeared first on Dinakaran.

Tags : Thirukkurugundi Ajaya Nambirayar Temple ,Kalakkadu ,Thirukkurungudi ,Nambarayar Temple ,Vasant Utsavam ,
× RELATED களக்காடு அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு