- தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு
- ஸ்காட் பொறியியல் கல்லூரி
- Veeravanallur
- சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி
- சேரன்மஹாதேவி ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- மின் மற்றும் மின்னணுவியல் துறை
- பொது மேலாளர்
- தம்பிதுரை
- தின மலர்
வீரவநல்லூர், ஏப்.20:சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது. சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு பொது மேலாளர் தம்பிதுரை தலைமை வகித்தார். ஐ.கியூ.எ.சி இயக்குநர் சுந்தரராஜன் முன்னிலை வகித்தார். துறைத்தலைவர் பாஸ்டின் சோலை நசரேன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக விகேபுரம் மின்வாரிய துணை பொறியாளர் அக்னஸ் சாந்தி பங்கேற்று மாணவர்களிடையே தொழில்நுட்ப உரையாற்றினார். நிகழ்ச்சியில் பல்வேறு பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர் அன்ரூபஸ் செய்திருந்தார்.
The post ஸ்காட் பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு appeared first on Dinakaran.