×

சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குப்பதிவு: துறையூர் தொகுதியில் 75% வாக்குப்பதிவு

 

துறையூர், ஏப். 20: பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட துறையூர் தொகுதியிலுள்ள 279 வாக்குச் சாவடிகளில் 79,126 ஆண் வாக்களார்களும், 88,674 பெண் வாக்காளர்களும், 19 மூன்றாம் பாலினத்தவர்களும் மொத்தம் 1,67, 819 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் அந்தந்த வாக்குச்சாவடியில் நேற்று காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குகளை பதிவு செய்தனர்.

பி.மேட்டூர், கோணப்பாதை, சிக்கத்தம்பூர், மதுராபுரியில் ஆகிய ஊர்களில் அமைக்கப்பட்ட 4 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நேரத்திற்குள் வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்குச் சாவடி பள்ளியின் நுழைவு கதவடைக்கப்பட்டது. டோக்கன்கள் பெற்ற வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்தனர். இறுதியில் இந்தத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,23,425 பேரில் 75 சதவிகிதம் வாக்காளர்கள் வாக்களித்தனர்.

The post சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குப்பதிவு: துறையூர் தொகுதியில் 75% வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Dharayur ,Satharyur ,Perambalur Parliamentary Constituency ,Dinakaran ,
× RELATED துறையூர் அருகே மினி பேருந்து சாலையோர...