×
Saravana Stores

வாக்களிக்க உற்சாகத்துடன் வந்த மாற்று திறனாளிகள், மூத்தோர்

 

திருவாரூர், ஏப். 20: வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்குமேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செய்வதற்கான வசதிகளை இந்திய தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதன்படி நாகப்பட்டினம் (தனி) நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மற்றும் நன்னிலம் சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் 850 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 85 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்து 200 மூத்தகுடிமக்களும் என மொத்தம் 2 ஆயிரத்து 50 பேர் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய படிவம் 12டி வழங்கப்பட்டது.

வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் வாக்குப்பதிவு பெறும் பணி கடந்த 5, 6 மற்றும் 8ம் தேதி என 3 நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேர்தலையொட்டி மாற்றுதிறனாளிகள் வாக்களிக்கும் வகையில் வாக்குசாவடி மையங்களில் சாய்வுதளம், சக்கர நாற்காலி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மாற்றுதிறனாளிகள் மற்றும் தங்களது வயதையும் பொருட்படுத்தாமல் முதியோர்கள் என பெரும்பாலானோர் உற்சாகமாக வாக்குசாவடி மையங்களுக்கு நேரில் வந்து வாக்களித்தனர்.

The post வாக்களிக்க உற்சாகத்துடன் வந்த மாற்று திறனாளிகள், மூத்தோர் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Election Commission of India ,Nagapattinam ,Separate ,
× RELATED வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய...