முத்துப்பேட்டை, ஏப். 20: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வடகாடு அரசு உயர்நிலைப் பள்ளி வாக்கு சாவடி 255வது பூத்தில் நேற்று பரபரப்பாக வாக்கு பதிவு நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் பகல் சுமார் 1மணிக்கு அங்கு ஓட்டு போட வந்த ஜாம்புவானோடை வடகாடு சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த பகிர்ச்சாமி மகன் செல்வம்(45) என்பவர் ஓட்டு போடாமல் கடும் குடிபோதையில் பூத்துக்குள் புகுந்து கடும் ரகளையில் ஈடுபட்டார்.
மேலும் அங்கிருந்தவர்களை முகம் சுழிக்கும் வகையில் திட்டி தாக்கவும் முயன்றார். இதனால் வாக்களிக்க வந்த மக்கள் அங்கிருந்து அலறடித்து சென்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் போதை ஆசாமியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் வாக்குப்பதிவு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தாமதமாக சென்றது.
The post வாக்கு சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களை விரட்டிய குடிமகனால் பரபரப்பு appeared first on Dinakaran.