- வாகன மண்டபம்
- திருக்கட்டப்பள்ளி முருகன் கோயில்
- திருக்காட்டுப்பள்ளி
- தஞ்சாவூர் மாவட்டம்
- திருக்காட்டுப்பள்ளி தஞ்சாவூர் மாவட்டம்
- புதிய வாகன மண்டபம்
- தாண்டாயுப்பனி ஸ்வாமி கோயில்
- ராஜகோபுரம்
- பழனியாண்டவர் வழிபாட்டு சங்கம் திருப்பணி
- திருக்கட்டப்பள்ளி முருகன் கோயில்
திருக்காட்டுப்பள்ளி, ஏப்.20: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் புதிய வாகன மண்டபம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ராஜகோபுரத்தின் கிழக்கே புதியதாக வாகன மண்டபம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. பழனியாண்டவர் வழிபாட்டு சங்க திருப்பணி குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கோயில் அர்ச்சகர்கள் முறையாக பூஜைகள் செய்து புதிய வாகன மண்டபத்தில் முருக பெருமானின் வாகனமான மயில் மற்றும் பங்குனி உத்திர தேர் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் வாகன மண்டபம் திறப்பு appeared first on Dinakaran.