×
Saravana Stores

பாபநாசம் அருகே 4 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு: வெறிச்சோடிய வாக்குச்சாவடி

 

தஞ்சாவூர், ஏப்.20:அடிப்படை வசதிகள் செய்து தராததால் நான்கு கிராமங்களை சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணித்து வாக்களிக்க செல்லாததால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது. மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோனூர், நெல்லித்தோப்பு, சீதம்பாடி, அண்ணா தோட்டம் ஆகிய நான்கு கிராமங்கள் அடங்கி உள்ளன. இந்த நான்கு கிராமங்களை சேர்ந்த மக்கள் குண்டும், குழியுமான சாலைகளில் கழிவு நீர் தேங்கி நின்று மக்கள் நடந்து செல்ல முடியாமல் தவித்து வருவதாக கூறுகின்றனர்.

தெருவிளக்கு இல்லாததால் 7 கி.மீ தூரம் இரவு நேரத்தில் பெண்கள் அச்சத்துடன் பாதுகாப்பு இல்லாமல் ஊருக்குள் வர வேண்டி உள்ளதாக கூறுகின்றனர்.பேருந்து வசதிகள் இல்லாமல் நாள்தோறும் பள்ளி கல்லூரிக்கு செல்பவர்கள் பல கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது என கூறும் இவர்கள் தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல முறை மாவட்ட கலெக்டர் உள்பட அனைத்து துறை அதிகாரிகளிடமும் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்ததாக தெரிவித்தனர்.இதன்படி இந்த 4 கிராமங்களை சேர்ந்த 1800 வாக்காளர்கள் வாக்களிக்க செல்லாததால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.

The post பாபநாசம் அருகே 4 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு: வெறிச்சோடிய வாக்குச்சாவடி appeared first on Dinakaran.

Tags : Papanasam ,Thanjavur ,Mayiladuthurai ,Konur ,Nellithoppu ,Seethambadi ,Anna ,Papanasam Assembly Constituency ,District… ,Dinakaran ,
× RELATED தந்தை சந்திரசேகர் கூறியதைப்போல்...