×
Saravana Stores

பொன்னமராவதியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் 2 மணி நேரம் தாமதம்

 

பொன்னமராவதி, ஏப்.20: பொன்னமராவதி பகுதியில் 107 வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் வாக்குப்பதிவு மந்தமாகவே நடந்தது. ஒரு மையத்தில் ஓட்டு மிஷின் பழுதால் 2மணி நேரம் காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மக்களவைத்தேர்தல் நேற்று நடந்தது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பொன்னமராவதி தாலுகாவில் 107வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு நேற்று காலை 7மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 66வது வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உதவி தேர்தல் அலுவலர் வில்சன், தாசில்தார் சாந்தா மற்றும் தேர்தல் அலுவலர்கள், பொறியாளர் ஆகியோர் ஓட்டுப்பதிவு இந்திரத்தை சரிசெய்தனர். இதனையடுத்து அந்த இயந்திரம் சரிசெய்யப்பட்டு காலை 9.15மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இப்பகுதியில் 40சதவீத வாக்குப்பதிவுகளே நடந்திருந்தது. மாலை வரை 50சதவீத வாக்குப்பதிவுகளே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post பொன்னமராவதியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் 2 மணி நேரம் தாமதம் appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati ,Lok Sabha elections ,Ponnamaravathi ,Sivaganga ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் சூதாட்டம் ஆன்லைன் நிறுவனத்தின் 4 கோடி சொத்து பறிமுதல்