×

கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது

திருவனந்தபுரம், ஏப்.20: களியக்காவிளையை சேர்ந்த மாடல் அழகி கடந்த சில தினங்களுக்கு முன்பு, விளம்பர படப்பிடிப்புக்காக கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்றார். பின்னர் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை-திருவனந்தபுரம் விரைவு ரயிலில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டார். கோட்டயம் அருகே ரயில் சென்று கொண்டு இருந்தது. அப்போது அவருக்கு அருகே அமர்ந்திருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அழகி மர்ம நபரை பிடிக்க முயன்று உள்ளார். ரயில் கோட்டயம் ரயில் நிலையத்தை அடைந்ததும் மர்ம நபர் இறங்கி ஓடிவிட்டார். இது குறித்து மாடல் அழகி திருவனந்தபுரம் ரயில்வே போலீசில் புகார் செய்தார். சம்பவம் நடந்த இடம் கோட்டயம் என்பதால் அந்த புகார் கோட்டயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.கோட்டயம் ரயில்வே போலீசார் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசோதித்தனர். இதில் மாடல் அழகியிடம் அத்துமீறியது கொல்லம் சவரா பகுதியைச் சேர்ந்த அன்சார் கான் (25) என்று தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அன்சார் கானை நேற்று கைது செய்தனர்.

The post கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kerala Thiruvananthapuram ,Kalikavlai ,Ernakulam, Kerala ,Ernakulam ,Chennai ,Thiruvananthapuram ,Express ,Kottayam ,Kerala ,
× RELATED களியக்காவிளை – கன்னியாகுமரி...