×
Saravana Stores

நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்

கடலூர்: கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் வினோத்(46). மருத்துவரான இவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கடந்த 10 வருடங்களாக நியூசிலாந்து நாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது ஜனநாயக கடமையான வாக்களிப்பதற்காக நியூசிலாந்தில் இருந்து விமான மூலம் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். அங்கிருந்து கார் மூலம் கடலூருக்கு நேற்று வந்து செம்மண்டலத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்று தனது வாக்கை செலுத்தினார். இவர் விமான போக்குவரத்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் செலவு செய்து வந்ததாக தெரிவித்து உள்ளார்.

The post நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர் appeared first on Dinakaran.

Tags : New Zealand ,Cuddalore ,Kaliaperumal ,Vinod ,Cuddalore Semmandalam ,
× RELATED தொடரை வென்றது இந்தியா: ஸ்மிரிதி மந்தனா அபார சதம்