- சட்டமன்ற உறுப்பினர்
- தங்கபாண்டியன்
- ராஜபாளையம்
- தங்கபாண்டியன்
- திமுக
- தென்காசி தொகுதி
- டாக்டர்
- ராணி ஸ்ரீகுமார்
- ராஜபாளையம் சட்டப் பேரவை
- தென்காசி நாடாளுமன்ற தொகுதி
- தின மலர்
ராஜபாளையம், ஏப். 20: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து, வாக்குச்சாவடிகளில் எம்எல்ஏ தங்கப்பாண்டியன், தென்காசி தொகுதியின் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வரும் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் இருந்த வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதற்கிடையே திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியன் ராஜபாளையம் தொகுதியிலுள்ள செட்டியார்பட்டி, சேத்தூர் பேரூராட்சி மற்றும் ராஜபாளையம் நகராட்சி பகுதிககள் உள்ளிட்ட அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அங்குள்ள திமுக பூத் ஏஜெண்ட்கள் மற்றும் கழக நிர்வாகிகளிடம் தேர்தல் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாருடன் இணைந்து, சேத்தூர் மற்றும் சுந்தரராஜபுரம், கிருஷ்ணாபுரம், ராஜபாளையம், அன்னப்பபராஜா பள்ளியிலுள்ள வாக்குச்சாவடி மையங்களையும் பார்வையிட்டார்.
அப்போது இந்தியா கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோவன். சிங்கப்புலி, அண்ணாவி, சேர்மன் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு: எம்எல்ஏ தங்கப்பாண்டியன் நடவடிக்கை appeared first on Dinakaran.