×

திரையரங்கில் ஏசி வேலை செய்யாததால் ரசிகர்கள் அதிருப்தி

 

கோவை,ஏப்.20: கோவை உப்பிலிப்பாளையத்தில் உள்ள ஒரு திரையரங்கில் மலையாள படமான அவேசம் ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தைப் பார்க்க நேற்று மாலை ரசிகர்கள் வந்தனர். அப்போது திரையரங்கில் ஏசி சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் படம் பார்க்காமல் திரையரங்கை விட்டு வெளியே வந்தனர்.

ஒரு சில ரசிகர்கள் படத்தை தொடர்ந்து ஒளிபரப்புமாறு ஊழியர்களை கேட்டுக்கொண்டனர். ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்டோர் தியேட்டரை விட்டு வெளியேறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த ரசிகர்கள் படம் பார்க்க செலுத்திய கட்டணத்தை திரும்ப தருமாறு கூறினர். அதன்பேரில் தியேட்டர் நிர்வாகம் அவர்களுக்கு படம் பார்க்க செலுத்திய பணத்தை திரும்ப வழங்கினர்.

The post திரையரங்கில் ஏசி வேலை செய்யாததால் ரசிகர்கள் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Uppilipalayam, Coimbatore ,Dinakaran ,
× RELATED விஷம் கொடுத்தும் பிழைத்ததால் கணவரை...