×

வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு

சென்னை: தேர்தலில் வாக்களிக்க வந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு, ‘இந்திய நாடு என் வீடு’ என்ற பாடலைப் பாடி அசத்தினார். நகைச்சுவை நடிகர் வடிவேலு சாலிகிராமத்தில் உள்ள காவேரி உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு நேற்று வந்தார். பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் வடிவேலு கூறுகையில், படத்தின் ஷூட்டிங் அதிகமாக இருந்ததால் என்னால் கடந்த முறை போல வாக்கு கேட்டு சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. இந்தியா தான் தெரியும் டிஜிட்டல் எனக்கு தெரியாது. இந்தியா குறித்து கண்ணதாசன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார் என ‘‘இந்திய நாடு என் நாடு இந்தியன் என்பது என் பேரு’’ என்ற பாடலை பாடினார். அப்போது இந்தியா என்பதை வேறு மாதிரி திரிக்கிறார்களே என்ற கேள்விக்கு, ‘‘வேற மாதிரி எடுத்து திரிச்சு போட்டு கலவரத்தை உண்டாக்கிட்டு போங்க’’ என நகைச்சுவையாக பதில் அளித்தார். பிஇம்முறை ஆட்சி மாற்றம் வருமா என்ற கேள்விக்கு எனது படம் 23ம் புலிகேசியில் மாற்றம் ஒன்றே மாறாதது எனக் கூறியுள்ளேன் என்றார்.

The post வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு appeared first on Dinakaran.

Tags : Vadivelu ,Chennai ,Vadiveli ,Kaveri High School ,Saligram ,
× RELATED ஊராட்சி ஒன்றிய நிதியில் முறைகேடு