- மக்களவைத் தேர்தல்
- சட்டசபை தேர்தல்கள்
- போக்குவரத்து துறை
- சென்னை
- பனீந்திர ரெட்டி
- பாராளுமன்ற தேர்தல்கள்
- கிளம்பக்கம் கலைனர் நூற்றாண்டு பஸ் முனையம்
- கோயம்பேடு பேருந்து நிலையம்
- மாதவரம் நியூ பஸ் ஸ்டாண்ட்
- தாம்பரம்
- தின மலர்
சென்னை: போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திரரெட்டி அறிக்கை: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, ஏப்.17, 18 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து 7154 பேருந்துகள், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம், வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டு, கடந்த 8ம் தேதி முதல் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில், ஏப்.17ம் தேதி சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளும், பயணிகளின் தேவைக்கேற்ப 807 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 2,899 பேருந்துகள் இயக்கப்பட்டு 1,48,800 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஏப்.18ம் தேதி வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளும், 2,308 சிறப்புப் பேருந்துகளும் ஆக மொத்தம் 4,400 பேருந்துகளில் 2,55,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஏப்.17, 18 ஆகிய 2 நாட்களில் 7,299 பேருந்துகளில் சுமார் 4,03,800 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு தினங்களில் சென்னையிலிருந்து 31,532 பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர்.
கடந்த 2021ல் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய நாள் சென்னையில் இருந்து மொத்தமாக இயக்கப்பட்ட 3,353 பேருந்துகளில் பயணித்த 1,36,963 பயணிகளை விட கூடுதலாக 1,18,037 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும், கடந்த தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளின் போது ஒரே நாளில் அதிகபட்சமாக இயக்கிய பேருந்துகள் மற்றும் பயணம் செய்த பயணிகளை விட தற்போது கூடுதலாக பயணித்துள்ளனர். பயணிகளின் வசதிக்காக, தெற்கு ரயில்வே தமிழ்நாடு அரசின் வேண்டுகோள்படி சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும், தஞ்சாவூரிலிருந்து திருச்சி வழியாக கோயம்புத்தூருக்கும் கூடுதல் ரயில்கள் மற்றும் சில ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு நேற்று முன்தினம் (18ம் தேதி) இயக்கப்பட்டது.
பேருந்து இயக்கங்களை திட்டமிடப்பட்டபடி இயக்க, போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குனர்கள், பொது மேலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் பேருந்து நிலையங்களில் கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்டு, நேற்று (19ம் தேதி) அதிகாலை 5 மணிக்குள் அனைத்து பயணிகளையும் பேருந்துகளில் தாங்கள் சேருமிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். பயணிகளின் தேவைக்கேற்ப பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக சென்று வாக்களிக்க தேவையான பேருந்துகள் இயக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். கடந்த 2021ல் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய நாள் சென்னையில் இருந்து மொத்தமாக இயக்கப்பட்ட 3,353 பேருந்துகளில்
பயணித்த 1,36,963 பயணிகளை விட கூடுதலாக 1,18,037 பயணிகள் பயணித்துள்ளனர்.
The post 2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல் appeared first on Dinakaran.