×

இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது: வாக்கு செலுத்தியபின் கமல்ஹாசன் பேட்டி

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேனாம்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு காலை 10 மணிக்கு வந்து தன்னுடைய வாக்கை செலுத்தினார். முன்னதாக அங்குள்ள அலுவலரிடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இயங்குவது குறித்து கேட்டார். பின்னர் நிருபர்களிடம் கமல்ஹாசன் கூறுகையில், இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க. இந்தியாவிற்கு எல்லா தேர்தலும் முக்கியமானது, குறிப்பாக இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது என்றார். மேலும், ‘இப்போதைக்கு சொல்வதற்கு எதுவும் இல்லை. ஏற்கனவே சொல்லியாச்சு’ என ஆங்கிலத்தில் கூறினார்.

The post இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது: வாக்கு செலுத்தியபின் கமல்ஹாசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Kamal Haasan ,CHENNAI ,People's Justice Center ,President ,Government School ,Thenampettai ,
× RELATED Indian 2 Audio Launch - Full Video | Kamal Haasan, Simbu, Lokesh Kanagaraj, Anirudh, Nelson, Shankar