×

குஜராத் காந்தி நகர் தொகுதியில் அமித் ஷா வேட்பு மனு தாக்கல்

காந்திநகர்: குஜராத் காந்தி நகர் தொகுதியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். குஜராத்தின் காந்தி நகர் மக்களவை தொகுதியில் முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாய், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி போட்டியிட்டு வெற்றி பெற்றதால் பாஜ கோட்டையாக கருதப்படுகிறது.

வரும் தேர்தலிலும் காந்தி நகர் தொகுதியில் அமித் ஷா மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் செயலாளர் சோனால் படேல் களம் காணுகிறார். இதையடுத்து அமித் ஷா நேற்று காந்தி நகர் ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான எம்.கே.தவேவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உடனிருந்தார்.

* மோடி ஓய்வின்றி உழைக்கிறார்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமித் ஷா, “பிரதமர் மோடி கடந்த 23 வருடங்களாக நாட்டு மக்களுக்காக விடுமுறையின்றி உழைக்கிறார். நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப் பதிவில் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது. அடுத்தடுத்து நடக்கும் தேர்தல்களில் மக்கள் கவனமாக வாக்களிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

The post குஜராத் காந்தி நகர் தொகுதியில் அமித் ஷா வேட்பு மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Gujarat Gandhi Nagar ,Gandhinagar ,Union ,Minister ,Gujarat ,Former ,Vajpayee ,Deputy ,LK Advani ,Gandhi Nagar Lok Sabha ,Gandhi Nagar ,Dinakaran ,
× RELATED டெல்லியில் உள்ள பாஜக தலைமை...