லக்னோ: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயித்தது. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச செய்ய முடிவு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் சென்னை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 57 ரன்கள் குவித்தார். தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் வீசினார்.
லக்னோ சார்பில் சிறப்பாக பந்துவீசிய குருணல் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாயினிஸ், யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னாய் மற்றும் மொசின் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 177 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்க உள்ளது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க லக்னோவும், ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்த சென்னையும் இன்று மல்லுக் கட்டுகிறது. அதுமட்டுமல்ல இந்த 2 அணிகளும் இதுவரை மோதிய, எல்லா ஆட்டங்களில் ஒவ்வொரு முறையும் 2 அணிகளும் தலா 200 ரன்னுக்கு மேல் குவித்துள்ளன.
The post ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி appeared first on Dinakaran.