×

மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்

மணிப்பூர்: மணிப்பூரின் தமான் போக்பி பகுதியில் வாக்குப்பதிவின் போது கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 102 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது . 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்களும் , அரசியல் கட்சி பிரமுகர்களும் மிகுந்த ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

மணிப்பூர் மாநிலம் உள் மணிப்பூர் தொகுதியில் உள்ள தமான்போக்பி பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடியில் ஆயுதம் தாங்கிய கும்பல் சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்களிக்க வந்தவர்கள் சிதறி ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. ஹிரோய் ஷம்பா பகுதியில் வாக்குச்சாவடிக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் அச்சமான சூழல் நிலவுகிறது.அத்துடன் மேலும் எரோய்ஷம்பா பகுதியில் உள்ள வாக்குச்சாவடி சூறையாடப்பட்டதால் மணிப்பூரில் பதற்றம் நிலவுகிறது.

The post மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Tamanboqbi polling station ,Moirang, Manipur ,Manipur ,Taman Bokbi ,India ,Tamanbokbi polling station ,Dinakaran ,
× RELATED மணிப்பூர், காஷ்மீர் பயணமா… நோ… நோ…...