×

நாம் ஓட்டு போட்டோம் என்று கூறுவதில் மரியாதையும், கௌரவமும் இருக்கிறது: தனது வாக்கை நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இந்தியாவின் 18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 68,321 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் வரிசையில் நின்று தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் 2024 தேர்தலை ஒட்டி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்கு சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்குரிமை உள்ள அனைவரும் கட்டாயமாக ஓட்டு போட வேண்டும். நாம் ஓட்டு போட்டோம் என்று கூறுவதில் மரியாதையும் , கௌரவமும் இருக்கிறது. நான் ஓட்டு போடவில்லை என்று கூறுவதில் எந்த மரியாதையும் இல்லை இந்த கௌவுரவமும் இல்லை என்றார்.

அஜித் வாக்களித்தார்

வழக்கம் போல் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கிய 7 மணிக்கு முன்பாகவே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு நடிகர் அஜித்குமார் முதல் ஆளாக வருகை புரிந்தார். பின்னர் வாக்குசாவடி மையத்தில் காத்து கொண்டிருந்த அவர் தனது வாக்கினை செலுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

The post நாம் ஓட்டு போட்டோம் என்று கூறுவதில் மரியாதையும், கௌரவமும் இருக்கிறது: தனது வாக்கை நடிகர் ரஜினிகாந்த் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rajinikanth ,Chennai ,Lok Sabha elections ,18th People's Election of India ,Union Territories ,Tamil Nadu ,Puducherry ,
× RELATED தேர்தலில் பணப்பட்டுவாடா, போஸ்டர்...