அம்பாலா: விவசாய கடன் தள்ளுபடி, விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் – அரியானா விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விவசாய சங்கங்கத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று பாட்டியாலா மாவட்டம் சம்பு ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தினர்.
அப்போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க கோரியும் முழக்கமிட்டனர். விவசாயிகள் மறியல் போராட்டம் காரணமாக 53 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 23 ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.
The post பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.