புதுடெல்லி: திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பல கட்டங்களாக பேரம் பேசி, மிரட்டல் விடுத்து, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, சுரேஷ் பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கும்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம், அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த மாதம் 20ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ, இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், அங்கித் திவாரி விவகாரத்தில் நான்கு வாரத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
The post அங்கித் திவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம் appeared first on Dinakaran.