×

தேர்தல் விதிமுறைகளை மீறி வீடு வீடாக சென்று எச்.ராஜா பிரசாரம்: அதிகாரிகளுடன் வாக்குவாதம்

காரைக்குடி: தேர்தல் விதிகளை மீறி நேற்று வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்ததாக எச்.ராஜா மீது காரைக்குடி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது. அதற்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் இதனை மீறி சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளர் தேவநாதனுக்கு ஆதரவாக பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, காரைக்குடி பகுதியில் நேற்று வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வதாக புகார் எழுந்தது.

அதனைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், சுப்பிரமணியபுரம் 2வது வடக்கு குறுக்கு தெரு பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, அப்பகுதியில் எச்.ராஜா வீடு, வீடாக பிரசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பிரசாரம் செய்யக்கூடாது என அறிவுறுத்திய பறக்கும் படையினருடன், எச்.ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதிகாரிகள் அறிவுறுத்தியும் வீடு, வீடாக சென்று தொடர்ந்து பிரசாரத்தை செய்தார். இதனைத்தொடர்ந்து அவர் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

The post தேர்தல் விதிமுறைகளை மீறி வீடு வீடாக சென்று எச்.ராஜா பிரசாரம்: அதிகாரிகளுடன் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : H.Raja ,Karaikudi ,H. Raja ,Tamil Nadu ,Puducherry ,parliamentary ,
× RELATED ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி...