- பொது
- ஆரோக்கியம்
- சென்னை
- பொது சுகாதார துறை
- செல்வ விநாயகம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- பொது சுகாதாரம்
சென்னை: பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே வாக்களிக்க மதிய நேரங்களில் வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் திறந்து வைக்க அறிவுறுத்தி உள்ளோம்.
அதுமட்டுமின்றி 2,200க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களும் தயார் நிலையில் இருக்கவும் எந்த நேரத்தில் அழைத்தாலும் பணிக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளோம். மேலும் பாதிக்கப்பட்டவர்களை மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப அலை வீசும் என்பதால் தயார் நிலையில் மருத்துவர்கள்: பொதுசுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.