×

ஓட்டுப்பதிவின் போது தண்ணீர், குடை எடுத்து செல்லுங்கள்

சென்னை: கோடை வெயில் காலம் என்பதால் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. வழக்கத்தை விட வெயில் சுட்டெரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் வாக்காளர்கள் காலை 7 மணிக்கே சென்று வாக்களியுங்கள். இதனால் வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளலாம். வெயிலில் சென்றால் தண்ணீர் மற்றும் குடை எடுத்துச் செல்ல வேண்டும். திறந்த வெளியில் நிற்க வேண்டிய சூழல் வந்தால், உங்கள் தலையை மூடிக்கொள்ள வேண்டும்.

நீண்ட நேரம் வெப்பத்தில் நிற்பது நீரிழப்பு, சோர்வு, பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, வாந்தி, வயிற்று வலி, வியர்வை, ஹைபர்தர்மியா அல்லது வெப்ப பக்கவாதம் ஏற்படுத்தக்கூடும். முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அதிக அபாயம் உள்ளது. இதய நோய்கள் உள்ளவர்களுக்கு வெப்பத்தால் பக்கவாதம், மாரடைப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே வாக்காளர்கள் வெயிலில் இருந்து காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

The post ஓட்டுப்பதிவின் போது தண்ணீர், குடை எடுத்து செல்லுங்கள் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Meteorological Department ,Dinakaran ,
× RELATED ஊட்டியில் இன்று இதுவரை இல்லாத அளவாக...