மதுரை: முறையான சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே அவசர கதியில் எய்ம்ஸ் கட்டுமான பணி நடைபெறுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடத்த பிப்ரவரி மாதம்தான் அனுமதி கேட்டது எய்ம்ஸ் நிர்வாகம். எய்ம்ஸ் கோரிய அனுமதியை தமிழ்நாடு அரசின் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நேற்றுதான் வழங்கியது.
நேற்று வழங்கப்பட்ட அனுமதியின்படி ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பிறகே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும். சுற்றுச்சூழல் அனுமதி இதுவரை பெறப்படாத நிலையிலேயே எய்ம்ஸ் கட்ட தேர்வான இடத்தில் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பொருட்களை வைப்பதற்கான கூடம், லாரி எடைமேடை போன்றவற்றை அமைக்கிறது எய்ம்ஸ் நிர்வாகம்.
The post சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே அவசர கதியில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை தொடங்கியது அம்பலம் appeared first on Dinakaran.