×

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் தயாராகும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்; ரூ.9,000 கோடி முதலீடு செய்கிறது டாடா மோட்டார்ஸ்

ராணிப்பேட்டை: உலகின் தலைசிறந்த சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தமிழ்நாட்டில் தயாராகிறது.

தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர்

உலகின் தலைசிறந்த சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தமிழ்நாட்டில் தயாராகிறது. டாடா மோட்டார்ஸ் தமிழ்நாட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி செய்ய உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டையில் புதிதாக அமையும் டாடா மோட்டார்ஸ் ஆலையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்கப்படும்.

தமிழ்நாட்டில் டாடா மோட்டார்ஸ் ரூ.9,000 கோடி முதலீடு

தமிழ்நாடு அரசின் முதலீட்டாளர் மாநாட்டில் டாடா மோட்டார்ஸ் தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி டாடா மோட்டார்ஸ் ராணிப்பேட்டையில் ஆலை அமைக்கிறது. டாடா மோட்டார்ஸ் ஆலை மூலம் பொறியியல் பட்டதாரிகளுக்கு கணிசமான ஊதியத்துடன் கூடிய தரமான வேலை கிடைக்கும்.

சொகுசு கார் உற்பத்தி கேந்திரமாகும் தமிழ்நாடு

அமெரிக்காவின் டெட்ராய்டு நகர் போல ராணிப்பேட்டையை சுற்றி ஏராளமான வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் அமையும். வாகன தொழிற்சாலைகள் அமைவதன் மூலம் சொகுசு கார்களின் உற்பத்தி மையமாக ராணிப்பேட்டை மாவட்டம் உருவாகும். ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர், டிஃபண்டர் போன்ற உயர் ரக சொகுசு -காச்கள் ராணிப்பேட்டையில் தயாரிக்கப்பட உள்ளன. ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது இதுவே முதல்முறை. பிரிட்டன், சீனா, பிரேசில், ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் ஜே.எல் ஆர். கார் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. தற்போது இந்தியாவில் விற்பனையாகும் ஜே.எல்.ஆர். கார்கள் பிரிட்டனில் இருந்து இறக்குமதியாகின்றன.

தமிழ்நாட்டில் 2 லட்சம் ஜேஎல்ஆர் கார்கள் தயாரிப்பு

ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை தமிழ்நாட்டில் தயாரிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. படிப்படியாக உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தயாராகும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது.

The post இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் தயாராகும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்; ரூ.9,000 கோடி முதலீடு செய்கிறது டாடா மோட்டார்ஸ் appeared first on Dinakaran.

Tags : India ,Jaguar Land Rover ,Tamil Nadu ,Tata Motors ,Ranipet ,Jaguar Land ,Jaguar ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED பாஜகவின் வீழ்ச்சி ஆரம்பம்.. இந்தியா...