×

மக்களவை தேர்தலில் வாக்களிக்க முதியோர், மாற்றுத்திறனாளிகளை வீட்டிலிருந்தே அழைத்துச் செல்ல இலவச வாகன வசதி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: மக்களவை தேர்தலில் வாக்களிக்க முதியோர், மாற்றுத்திறனாளிகளை வீட்டிலிருந்தே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாக்க்ஷம் என்ற செயலி மூலம் இலவச பயண வசதியை முதியோர், மாற்றுத்திறனாளிகள் பெறலாம் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். முதியோர், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சென்றுவிட்டு திரும்பும்வரை இலவச வாகன வசதி செய்து தரப்படும். இலவச பயண வசதி தேவைப்படும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் 1950 என்ற எண்ணில் அழைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மக்களவை தேர்தலில் வாக்களிக்க முதியோர், மாற்றுத்திறனாளிகளை வீட்டிலிருந்தே அழைத்துச் செல்ல இலவச வாகன வசதி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Electoral Officer ,Chennai ,Chief Election Officer ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை...