×

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்

அசாம்: மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். மக்களவை தேர்தலில் அசாமில் திரிணமூல் கட்சி சார்பில் 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களை ஆதரித்து நேற்று சில்ச்சர் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பேசியதாவது: பிரதமர் மோடி தொடா்ந்து 3வது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் ஜனநாயகமும் இருக்காது, தேர்தல்களும் இருக்காது.

ஒட்டுமொத்த நாட்டையும் தடுப்பு காவல் முகாமாக பாஜ மாற்றிவைத்துள்ளது. உத்தரபிரதேசம், குஜராத், அசாம், டெல்லி என நாடு முழுவதும் மக்களை பாஜ பிளவுபடுத்தி, துன்புறுத்தி வருகிறது. மணிப்பூரில் 200 தேவாலயங்கள், மசூதிகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. நாட்டில் வன்முறை தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதையே பாஜ விரும்புகிறது. எனது வாழ்நாளில் இத்தகைய அபாயகரமான தேர்தலை நான் இதுவரை சந்தித்ததே இல்லை. திரிணமூல் காங்கிரஸ் கட்சி அனைத்து மதங்கள் மீதும் அன்பு கொண்டுள்ளது. மதங்களின் அடிப்படையில் மக்கள் பிளவுபடுத்தப்படுவதை ஒருபோதும் விரும்பாது என்றாா்.

The post மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Modi ,West Bengal ,Chief Minister ,Mamata Banerjee ,Assam ,Trinamool Congress ,Trinamool ,Assam Lok Sabha ,Dinakaran ,
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி