மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் செங்கோல் தருவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த தினகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆகம விதிகள் ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள்; அதன் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும். ஆகம விதிகள் விவகாரத்தில் ஒரே நாளில் உத்தரவு பிறப்பிக்க நாங்கள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
The post மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி நீதிபதிஉத்தரவை ரத்து செய்ய ஐகோர்ட் கிளை மறுப்பு appeared first on Dinakaran.