- பாஜக
- காசர்கோட்
- தேர்தல் ஆணையம்
- தில்லி
- மாவட்ட கலெக்டர் அலுவலகம்
- காசர்கோடு
- கேரளா
- காசர்கோட்: தேர்தல் ஆணையம்
- தின மலர்
டெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முறைகேடாக பூயன்படுத்த வாய்ப்பே இல்லை என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு தொகுதியில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது.பொதுமக்கள் மற்றும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் ஏஜென்டுகள் இதில் கலந்து கொண்டனர். முதலில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் 190 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பரிசோதிக்கப்பட்டன. பின்னர் முதல் கட்டமாக 20 இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அப்போது இயந்திரத்தில் 9 வேட்பாளர்கள், நோட்டாவுக்காக ஒரு முறை பட்டனை அழுத்தி சோதித்துள்ளனர். மற்ற வேட்பாளர்கள், நோட்டாவுக்கு ஒரு ஒப்புகைச் சீட்டு வந்தது; -பா.ஜ.னவுக்கு மட்டும் 2-ஒப்புகைச் சீட்டு வந்தது.பா.ஜ.க.வுக்கு 2 வாக்குகள் பதிவாவது குறித்து மாவட்ட தேர்தல் அறிகாரியிடம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் புகார் அளித்தது.
இதனிடையே ஒப்புகைச் சீட்டு 100% எண்ணக்கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் முறையீடு ஒன்றை முன்வைத்தார். ஒரு முறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டு பதிவாவது குறித்து பிரசாந்த் பூஷண் நீதிபதிகளிடம் முறையிட்டார். மேலும் ஒப்புகைச் சீட்டை வாக்காளர்கள் தங்களது கையில் எடுத்து பெட்டிக்குள் போம அனுமதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங்கிடம், “இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்த நிலையில், கேரளாவில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 ஓட்டு பதிவாவதாக வெளியான புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுந்ததாக புகார் ஏதும் வரவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
The post காசர்கோட்டில் மாதிரி வாக்குப் பதிவின்போது ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் விழுந்ததாக புகார் ஏதும் வரவில்லை : தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.