×

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து டெவோன் கான்வே விலகிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் ரிச்சர்ட் க்ளீசன்

சென்னை: காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து டெவோன் கான்வே விலகிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிச்சர்ட் க்ளீசன் சேர்க்கப்பட்டார். நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் அதிகபட்ச ரன்கள், அதிகபட்ச சிக்ஸர்கள் என அமர்க்களமாக நடைபெற்று வருகிறது.

பிளேஆஃப் சுற்றில் பங்குபெற ஒவ்வொரு அணிகளும் கடுமையாக போராடி வருகின்றன. பெங்களூரு, மும்பை, பஞ்சாப் அணிகளை தவிர மற்ற அணிகள் குறைந்தது 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து டெவோன் கான்வே விலகிய நிலையில் ரிச்சர்ட் க்ளீசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில், சென்னை அணிக்காக விளையாடிய டெவோன் கான்வே 23 போட்டிகளில் 924 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 9 அரை சதங்களும் அடங்கும். சிஎஸ்கே அணியில் புதிதாக இணைந்துள்ள ரிச்சர்ட் க்ளீசன் இங்கிலாந்து அணிக்காக 6 டி20 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கூடுதலாக, க்ளீசன் 90 டி20 போட்டிகளில் விளையாடி 101 டி20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

The post காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து டெவோன் கான்வே விலகிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் ரிச்சர்ட் க்ளீசன் appeared first on Dinakaran.

Tags : Richard Gleeson ,Chennai Super Kings ,Devon Conway ,IPL series ,Chennai ,IPL ,Dinakaran ,
× RELATED மே 24, 26ம் தேதிகளில் சென்னையில்...