டெல்லி : ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாக ராகுல் காத்தி எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ““பாஜக மற்றும் RSS அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது இந்திய அரசியல் சாசனம் மற்றும் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் சட் ட கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். இவர்களின் சித்தாந்தத்தை எதிர்த்து, நாம் வீதியில் இறங்கி போராட வேண்டும்.
காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். சிறப்பான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து கோரிக்கைகளை பெற்று தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பா.ஜ.க.வின் சித்தாந்தத்தை வீழ்த்துவோம்,”இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த தேர்தலில் ஆளும் பாஜகவிற்கும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த இண்டியா கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
The post நாம் அனைவரும் ஒன்றிணைந்து பா.ஜ.க.வின் சித்தாந்தத்தை வீழ்த்துவோம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் appeared first on Dinakaran.