சென்னை: ஐக்கிய அரபு நாடுகளில் கனமழையால் சென்னையில் இருந்து துபாய், குவைத், சார்ஜா செல்லும் விமானங்கள் 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, குவைத் உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், அங்கு மோசமான வானிலை நிலவி வருகிறது. இதையடுத்து, சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்தில் இன்று அதிகாலை முதல் துபாய், சார்ஜா, குவைத் பகுதிகளுக்கு செல்லும் 5 விமானங்கள், அதேபோல் மேற்கண்ட நாடுகளில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 5 விமானங்கள் என மொத்தம் 10 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில் கனமழையால் சென்னையில் இருந்து துபாய், குவைத், சார்ஜா செல்லும் விமானங்கள் 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. துபாய், சார்ஜா, குவைத் நாடுகளுக்கு சென்னையில் இருந்து செல்லும் 12 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக துபாய், குவைத், சார்ஜா ஆகிய 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அபுதாபி, சார்ஜா, மற்றும் துபாய்க்கு இயக்கப்படும் ஒரு சில விமானங்களும் பலமணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன.
இதனால் துபாய் செல்ல வந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிறுவன கவுன்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். விமான நிறுவன அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
The post சென்னையில் இருந்து துபாய், குவைத், சார்ஜா செல்லும் விமானங்கள் 2-வது நாளாக ரத்து: பயணிகள் அவதி! appeared first on Dinakaran.