×

“மீண்டும் மோடி வென்றால் நாடே மணிப்பூர் போன்று மாறும்” – நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் எச்சரிக்கை

சென்னை: பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் மணிப்பூரில் நடப்பதை போல அனைத்து மாநிலங்களிலும் நடக்கும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான வரகல பிரபாகர் எச்சரித்துள்ளார். சென்னை சிந்தனையாளர் மன்றம் சார்ப்பில் தேசிய அளவில் தற்போதைய அரசியல் சூழல் என்ற கருப்பொருளில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில்சிறப்பு அழைப்பாளராக தி இந்து குழுமத்தின் தலைவர், அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் வரகல பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற ஜனநாயகம், சமத்துவம், பேச்சுரிமை, கருத்துரிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலையில் இருப்பதாக என்.ராம் கவலை தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய வரகல பிரபாகர்; நாட்டில் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை 40%ஆக அதிகரித்துள்ளது என கூறினார். பின்னர் பேட்டியளித்த அவர்; மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வரவே வராது. மக்களவை தேர்தலில் 202 இடஙக்ளில் பாஜக அரசு தாண்டாது என்று கூறினார்.

தேர்தல் பத்திர ஊழல் குறித்த செய்தி மக்கள் மனதில் வேகமாக சென்று சேர்ந்துவிட்டதாக கூறிய அவர் பாஜக அரசு தான் மிகவும் ஊழல் மிகுந்த அரசு என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள் என்றும் கூறினார்.

The post “மீண்டும் மோடி வென்றால் நாடே மணிப்பூர் போன்று மாறும்” – நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Modi ,Nade ,Manipur ,Nirmala Sitharaman ,Baragala Prabhakar ,Chennai ,Varakala Prabhakar ,Union Finance Minister ,BJP ,Thanayyar Forum ,Nate ,Barakala Prabhakar ,
× RELATED மாஸ்கோவில் மோடி மணிப்பூரில் ராகுல்: காங்கிரஸ் தாக்கு