- தீ தொண்டு நாள் வார இறுதி
- அரந்தாங்கி
- அறந்தாங்கி
- தீ தொண்டு நாள் வார விழா
- அரந்தங்கி தீயணைப்பு நிலையம்
- அர்தனங்கி தீயணைப்பு நிலையம்
- விச்சிசெல்வான்
- அரந்தங்கி தீ தொண்டு நாள் வார இறுதி
- தின மலர்
அறந்தாங்கி, ஏப்.18: அறந்தாங்கி தீயணைப்பு நிலையத்தின் சார்பில் தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு தீ தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அறந்தாங்கி தீயணைப்பு நிலைய அலுவலர் வெற்றிசெல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அறந்தாங்கி நகர் பகுதி மற்றும் கட்டுமாவடி முக்கம், எல்லன்புரம் உள்ளிட்ட பகுதியில் எளிதில் தீபிடிக்கும் பொருட்களை வீடுகளில் சேமித்து வைக்காதீர்கள்.
மின்சார தீ விபத்து ஏற்பட்டால் முதலில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் தரமான வயர்களை பயன்படுத்த வேண்டும். கடை, அலுவலகங்களை பூட்டுவதற்கு முன் மின் இணைப்பை துண்டித்து பூட்ட வேண்டும்.குழந்தைகளிடம் தீபெட்டி, மெழுகுவத்தி கொடுக்க கூடாது, விளக்கு அருகே விளையாட கூடாது. உள்ளிட்ட விழிப்புணர்வு வாசம் அடங்கிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கி விழிப்
புணர்வு ஏற்படுத்தினர்.
The post அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா appeared first on Dinakaran.