பெரம்பலூர்,ஏப்.18: பெரம்பலூர் பெருமாள், சிவன் கோயில்களில் உண்டியல்கள் திறக்கப் பட்டு காணிக்கைகள் எண்ணும் பணிகள் நேற்று நடந்தது. ரூ.2.96 லட்சம் காணிக்கை கணக்கீடு செய்யப்பட்டது.
பெரம்பலூர் நகரத்திலுள்ள மதனகோபால சுவாமி கோயில் மற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோயில்களைச் சேர்ந்த உண்டியல்கள் திறந்து காணிக்கைகள் எண்ணும் பணிகள் நேற்று காலை 11மணி அள வில் இந்துசமய அறநிலையத்துறை தக்கார் லட்சுமணன், கோயில்களின் செயல்அலுவலர் கோவிந்தராஜன், கோயில் ஆய்வாளர் தீபலட்சுமி ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு, கோயில்ஊழியர்கள், கிராம வங்கி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர் தொண்டர்கள் ஆகியோர் ரொக்கம் மற்றும் நாணயங்களை எண்ணி சரிபார்த்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் அறங்காவலர் வைத் தீஸ்வரன் உடன் இருந்தார். உண்டியலில் ரூ 2,96,675 ரொக்கம் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கோயில் உண்டியல்களில் இருந்து பெறப்பட்டது. இந்தக் கோயில்களில் திருவிழா முடிந்ததும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணுவது வழக்கம்.
The post பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு appeared first on Dinakaran.