×
Saravana Stores

பெரம்பலூர் மாவட்டத்தில் 1400 பேர் பாதுகாப்பு பணி அரியலூர் அருகே கல்லங்குறிச்சி வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலைஅலுவலர்கள் நுண்பார்வையாளர்களை ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் நடந்தது

அரியலூர் ஏப் 18:அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி 2024, நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள நுண்பார்வையாளர்களை கணினி மூலம் இறுதி தற்செயல் தெறிவு முறையில் ஒதுக்கீடும் செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில், சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் போர்சிங் யாதவ், முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடைபெறவுள்ளதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திலுள்ள 149.அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குச்சாவடி மையங்களும், 150.ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மேற்காணும் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர், நிலை அலுவலர் -1, நிலை அலுவலர் -2, நிலை அலுவலர் -3, நிலை அலுவலர் -4 ஆகிய 2909 நபர்களை கணினி மூலம் இறுதி தற்செயல் தெறிவு முறையில் ஒதுக்கீடும் செய்யும் பணி நேற்று நடைபெற்றது.இதே போன்று பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள 95 நுண் பார்வையாளர்களை கணினி மூலம் இறுதி தற்செயல் தெறிவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உமா மகேஸ்வரன், மாவட்ட தகவலியல் மைய அலுவலர் ஜான் பிரிட்டோ, மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர், ஏப்.18: அரியலூர் அடுத்த கல்லங்குறிச்சி கிராமத்திலுள்ள கலியுகவரதராசப் பெருமாள் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் 1400 பேர் பாதுகாப்பு பணி அரியலூர் அருகே கல்லங்குறிச்சி வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலைஅலுவலர்கள் நுண்பார்வையாளர்களை ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Perambalur district ,District Election Officer ,Kallankurichi ,Ariyalur ,Chidambaram ,Parliament Constituency 2024 ,Ariyalur District Collector's Office ,Perambalur ,Kallangurichi ,Dinakaran ,
× RELATED நிலமற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர்...