×

பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்

திருப்பூர், ஏப்.18: திருப்பூர் நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக கொண்ட திருப்பூர் பார் அசோசியேசன் செயல்படுகிறது. இதில் தலைவர், 2 துணை தலைவர்கள் (ஆண், பெண்), செயலாளர், 2 இணை செயலாளர்கள் (ஆண், பெண்), பொருளாளர், 8 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகள் உள்ளன. நடப்பு 2024-25-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக வழக்கறிஞர் சாய்ராம் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று அனைத்து பதவிகளுக்கும் மனு தாக்கல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்தது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. 22-ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெறலாம். போட்டி ஏற்படும் பதவிகளுக்கு 25-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Bar Association ,Tirupur ,Tirupur Bar Association ,Tirupur Courts ,
× RELATED தேனியில் இன்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு