×

இது உங்கள் ராம ராஜ்ஜியம்: ஆம் ஆத்மி இணையதளம் தொடக்கம்

புதுடெல்லி: மக்களவை தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி “இது உங்கள் ராம ராஜ்ஜியம்” என்ற இணையதளத்தை தொடங்கி உள்ளது. ராமநவமி தினமான நேற்று “இது உங்கள் ராம ராஜ்ஜியம்” என்ற இணையதளத்தை ஆம் ஆத்மி தொடங்கி உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் சஞ்சய் சிங், அடிசி, சவுரப் பரத்வாஜ் மற்றும் ஜாஸ்மின் ஷா ஆகியோர் கூட்டாக இணையதளத்தை தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சிங், “டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளில் டெல்லியில் 3 முறை ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. இதை மக்களுக்கு வௌிப்படுத்தவே இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.ராம நவமி நாளில் கெஜ்ரிவால் மக்களிடையே இல்லாதது இதுவே முதல்முறை. பொய் சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று குற்றம்சாட்டினார்.

The post இது உங்கள் ராம ராஜ்ஜியம்: ஆம் ஆத்மி இணையதளம் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Rama Kingdom ,Yes Aatmi ,New Delhi ,Lok Sabha elections ,Yes Atmi Party ,is your ,Rajjiyam ,Yes Atmi ,Kingdom ,Ramanavami Day ,
× RELATED கண்ணாடி முகப்பில் பாஸ்டேக் ஸ்டிக்கர்...