×
Saravana Stores

ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்

பாங்காங்: மியான்மரில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த முன்னாள் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மியான்மரில் கடந்த 2021ம ஆண்டு மக்களாட்சியை கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அப்போது அரசு ஆலோசகராக இருந்த ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இதில் அவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் முன்னாள் அதிபர் வின் மின்ட் கைது செய்யப்பட்டு அவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அவரும் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் மியான்மரில் வெப்ப அலை வீசி வருகிறது. இதன் காரணமாக சிறையில் இருக்கும் தலைவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகின்றது. இதனால் ஆங் சான் சூகி மற்றும் வின் மின்ட் ஆகியோர் வீட்டு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் சிறையில் இருந்து மாற்றப்பட்டது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

The post ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Aung San Suu Kyi ,Bangkok ,Myanmar ,Dinakaran ,
× RELATED மியான்மரில் படகு கவிழ்ந்து 7 பேர் பலி