×

தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு

குளத்தூர், ஏப். 18:தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு விழா நடைபெற்றது. குளத்தூரை அடுத்த தருவைக்குளம் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள புனித அந்தோணியார் திருத்தல திருப்பயணிகள் இல்லத் திறப்பு விழா நடந்தது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு பன்னீர்செல்வம் தலைமை வகித்து திருப்பயணிகள் இல்லத்தை அர்ச்சித்து திறந்து வைத்து திருப்பலி நடத்தினார். தொடர்ந்து நடந்த ஜெபமாலை, திருப்பலியை அடுத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். ஏற்பாடுகளை பங்குதந்தை வின்சென்ட், உதவி பங்குதந்தை சஜன், வேதியர் மார்ட்டின் மற்றும் ஆலய ஊழியர்கள் செய்திருந்தனர்.

The post தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Pilgrimage Home ,Daruwaikulam ,Kulathur ,Thirupayani's House ,Daruvaikulam ,St. ,Anthony's Pilgrimage House ,Daruwaikulam East Coast Road ,Thoothukudi ,Diocese ,Principal ,Panneerselvam ,Inauguration ,Dinakaran ,
× RELATED குளத்தூரில் மாநில கபடி போட்டி