×

வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு

திட்டக்குடி, ஏப். 18: திட்டக்குடியை அடுத்துள்ள கோழியூர் கிராமத்தில் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து செல்லும் பாசன வாய்க்காலில் பிறந்த ஒரு நாளான ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் சடலமாக கிடந்தது. தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பிறந்த குழந்தையை வாய்க்காலில் வீசி சென்றதால் இறந்ததா அல்லது இறந்த குழந்தையை பாசன வாய்க்காலில் வீசி சென்றனரா, வேறு கிராமத்தில் வாய்க்காலில் குழந்தை வீசப்பட்டு தண்ணீரில் அடித்து வரப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு இதே இடத்தில் பெண் சிசு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு appeared first on Dinakaran.

Tags : Phetakkudi ,Wellington reservoir ,Kozhiyur ,Thitakudi ,
× RELATED திட்டக்குடி அருகே டயர் வெடித்து மரத்தில் கார் மோதி பொறியாளர் பலி