×

₹1.50 லட்சம் கொள்ளை

சேலம், ஏப். 18: சேலம் பள்ளப்பட்டி பகுதியில் டூவீலர் உதிரிபாக விற்பனை கடை உள்ளது. இங்கு சாமிநாதபுரத்தை சேர்ந்த நடராஜன் (41) என்பவர் மேலாளராக இருக்கிறார். கடந்த 12ம் தேதி கடையை பூட்டி விட்டுச்சென்றார். பின்னர் மறுநாள் வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, உரிமையாளரின் அறையில் இருந்த ₹1.50லட்சத்தை மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் கடையினுள் புகுந்து திருடிச்சென்றிருப்பது தெரிந்தது. இதுபற்றி அவர் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ₹1.50 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Pallapatti ,Natarajan ,Saminathapuram ,Dinakaran ,
× RELATED கைதிகளுக்கு கஞ்சா கடத்திய சமையல்காரர் ‘டிஸ்மிஸ்’