×
Saravana Stores

பராமரிப்பு பணிகளுக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நாள்தோறும் ஏராமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் தாவரவியல் பூங்காவுக்கு செல்கின்றனர். கோடை விடுமுறையின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதையொட்டி கோடை விடுமுறையான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பூங்காவை தயார் செய்யும் பணிகளில் தோட்டக்கலைத்துறையினர் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில், கோடை சீசனை முன்னிட்டு பூங்காவை தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் சீரமைப்பு மற்றும் பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி பெரிய புல் மைதானம் மூடப்பட்டு அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதே போல் பெர்ன் புல் மைதானங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால், பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

The post பராமரிப்பு பணிகளுக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல் appeared first on Dinakaran.

Tags : Ooty Botanic Garden ,Ooty ,Nilgiris ,Botanical Gardens ,Ooty Botanical Garden ,Dinakaran ,
× RELATED ஊட்டியில் தொடர் மழையால் மேரிகோல்டு மலர்கள் அழுகின