- மோடி அரசு
- வடகிழக்கு
- அட்டர்னி ஜெனரல்
- ஜெய்ராம் ரமேஷ்
- தில்லி
- காங்கிரஸ்
- பொதுச்செயலர்
- வடகிழக்கு மாநிலம்
- பொது செயலாளர்
- மணிப்பூர்
டெல்லி: வடகிழக்கு மாநில மக்களை மோடி அரசு கைவிட்டுவிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது; வடகிழக்கு மாநில மக்களை கைவிட்டுவிட்ட மோடி அரசு. மணிப்பூரில் வன்முறை தலைவிரித்தாடுகிறது; வடகிழக்கு மாநிலங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படாமல் உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் வன வளத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டினார். அருணாச்சலப் பிரதேசத்தில் சீன ராணுவத்தின் ஊடுருவலை மோடி அரசு தடுக்கவில்லை. நாகா தலைவர்கள் உடனான அமைதிப் பேச்சும் முடங்கிப் போயுள்ளதாகவும், வடகிழக்கு மாநில பிரச்சனை குறித்து தமது பிரச்சாரத்தில் மோடி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
The post வடகிழக்கு மாநில மக்களை கைவிட்டுவிட்ட மோடி அரசு: காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.