×

வடகிழக்கு மாநில மக்களை மோடி அரசு கைவிட்டுவிட்டதாக காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

டெல்லி: வடகிழக்கு மாநில மக்களை மோடி அரசு கைவிட்டுவிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். “மணிப்பூரில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. வடகிழக்கு மாநிலங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படாமல் உள்ளது.வடகிழக்கு மாநிலங்களில் வன வளத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அருணாச்சலப் பிரதேசத்தில் சீன ராணுவத்தின் ஊடுருவலை மோடி அரசு தடுக்கவில்லை. நாகா தலைவர்கள் உடனான அமைதிப் பேச்சும் முடங்கிப் போயுள்ளது. வடகிழக்கு மாநில பிரச்சனை குறித்து தமது பிரச்சாரத்தில் மோடி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

The post வடகிழக்கு மாநில மக்களை மோடி அரசு கைவிட்டுவிட்டதாக காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,Modi government ,North-Eastern states ,General Secretary ,Jairam Ramesh ,Delhi ,North Eastern ,Manipur ,North-Eastern ,Dinakaran ,
× RELATED தோல்வி பயத்தில் பாஜகவும் மோடியும்: ப.சிதம்பரம் விமர்சனம்